
ஒடிசா மாநிலம் காலஹந்தி மாவட்டத்தில் 23 வயதுடைய வாலிபர் வசித்து வந்துள்ளார். நேற்று அந்த வாலிபரும், 17 வயது சிறுமியும் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது, உயிரிழந்த இரண்டு பேரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் காதலித்திருக்கலாம். வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம். எனவே மன உளைச்சலில் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது யாராவது கொலை செய்து உடலை தூக்கில் தொங்க விட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.