கரூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கனூர் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்து 7 மாதங்களுக்கு முன்பு ரங்கசாமியின் மனைவி பிரிந்து சென்றார். இதனையடுத்து ரங்கசாமி 17 வயது சிறுமியுடன் நட்பாக பழகி வந்தார். கடந்த ஜூன் மாதம் சிறுமி பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற ரங்கசாமி வீட்டில் இறக்கி விடுவதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்றார்.

பின்னர் போகும் வழியிலேயே சிறுமியை ரங்கசாமி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் ரங்கசாமியை தேடி வந்தனர். நேற்று தலைமறைவாக இருந்த ரங்கசாமியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.