
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சோமா கோபா. 19 வயதான இவர் தன்னுடைய வீட்டின் பக்கத்தில் வசித்து வந்த யாஸ்மதி என்ற 17 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஜார்கண்டிலிருந்து அழைத்துச் சென்று வாடகைக்கு வீடு எடுத்து அங்கு தங்க வைத்து இருவரும் கணவன் மனைவி போல் வசித்து வந்தார்கள். அவருடன் அதே ஊரைச் சேர்ந்த தன்னுடைய நண்பர்கள் 3 பேரை சோமா தங்க வைத்துள்ளார். இதற்கிடையில் கடந்த சில தினங்களாகவே சோமா நீண்ட நேரமாக செல்போனில் ஒரு பெண்ணோடு பேசி வந்ததால் சிறுமி இதை கண்டித்துள்ளார். இருப்பினும் சோமா அந்த பெண்ணிடம் பேசுவதை நிறுத்தாமல் இருந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த சிறுமி கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள் .மேலும் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று குடும்பம் நடத்தி அவரை தற்கொலைக்கு தூண்டிய சோமா மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் இரண்டிற்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்து சிறுமின் கழுத்தை நெரித்துள்ளார்கள். அதில் கழுத்து எலும்பு உடைந்து அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் சோமா வீட்டில் தங்கி இருந்த சுனில் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவர் கூறுகையில், ஆரம்பத்தில் சோபா சிறுமியின் மீது பாசமாகத்தான் இருந்தான். பின்னர் அவருக்கு வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டதனால் அவரோடு அடிக்கடி பேசி வந்தான். இது யாஸ்மத்துக்கு தெரிய வந்ததால் இருவருக்கும் சண்டை வந்தது. இதனால் எரிச்சல் அடைந்த சோமா யாஸ்மதியை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என்று எங்களிடம் உதவி கேட்டாலர்.
அதற்கு நாங்களும் சம்மதித்தோம். பிறகு சம்பவம் நடந்த அன்று சோமா, நான் மற்றும் இன்னொரு நண்பன் மூவரும் சேர்ந்து திருமதி சிறுமி யாஸ்மதியின் கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொலை செய்து பின்னர் அவருடைய கழுத்தில் துப்பட்டாவை கட்டி அங்கிருந்து பேனில் தொங்க விட்டோம். பிறகு எதுவும் தெரியாது போல வேலைக்கு சென்று விட்டு மாலையில் வந்து பார்ப்பது போல் பார்த்து அழுது நடித்தோம் என்று கூறியுள்ளார்.