நாகர்கோவிலைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் மேடை கச்சேரி பாடகியாக இருந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருநெல்வேலியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பாடுவதற்காக சென்றுள்ளார். அப்போது இவருக்கும், 17 வயதான சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. இதையறிந்த அச்சிறுவனின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் அந்த சிறுவன், இளம் பெண்ணிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த இளம்பெண் நேற்று காலை திருநெல்வேலியில் உள்ள அந்த சிறுவனின் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். நீண்ட நேரம் ஆகியும் யாரும் கதவை திறக்காததால் கூச்சலிட்டு கத்தியுள்ளார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்தப் தகவலின்படி விரைந்து வந்த காவல்துறையினர் அந்த இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மேற்கண்ட விவரங்கள் தெரிய வந்தது. மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.