மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரத்தில் உள்ள கவுதம் நகர் பகுதியில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாகி வருகிறது. மார்ச் 22ஆம் தேதி, ஷார்தா நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், நண்பர்கள் அழைத்ததால் சேதக் பாலம் அருகே உள்ள ஒரு கஃபேக்கு சென்றார். அங்கிருந்து, அர்பாஸ், ஷானு, அல்தாஃப் மற்றும் மற்ற 5 பேர் சேர்ந்த குழுவினர், அவரை வலுக்கட்டாயமாக ஹத்தாய் கேதா அணைக்கடைக்கரையிலுள்ள தனிமையான இடத்திற்கு அழைத்து சென்றனர்.

 

அங்கு சிறுவனின் ஆடைகளை அகற்றியபின், அவரை பெல்ட் போன்றவைகளால் கொடூரமாக தாக்கினர். இதனை மேலும் மோசமாக்கும் வகையில், இந்த தாக்குதலை முழுமையாக வீடியோவாக பதிவு செய்துள்ளனர். ACP ஹனுமான்கஞ்ச் ரகேஷ் பாகெல் கூறுகையில், இது பழைய கோபத்தின் விளைவாக நடைபெற்றுள்ளது என்றும், இந்த தாக்குதலின் பின்னணியில் பழிவாங்கும் நோக்கம் இருப்பது உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். ஏற்கனவே சிலரை சிறையில் அடைத்த போது, ஷானு கோக்டா மீது தாக்குதல் நடந்ததை காரணமாகக் கொண்டு, இப்போது இந்த சிறுவன் மீது பழி தீர்த்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக அர்பாஸ் ஷேக், ஷானு கோக்டா உட்பட 8 பேர் மீது ” FIR” பதிவு செய்யப்பட்டு, வழக்கு MP நகர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற சிலர் ஏற்கனவே குற்ற வழக்குகளில் கைதானவர்களாக இருப்பதும், அவர்களது பழைய கிரிமினல் பின்புலமும் தற்போது போலீசாரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்காக குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கடும் கோபத்துடன் கோரிக்கை வைக்கின்றனர்.