நெல்லை மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளடைவில் அந்த மாணவன் மீது அந்த பெண்ணுக்கு மோகம் ஏற்பட்டதால் அடிக்கடி மாணவனை அழைத்து அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த மாணவனிடம் அவர் கேட்டுள்ளார். ஆனால் இதற்கு அந்த மாணவன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் உடனே போலீசில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த இளம் பெண் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.