நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரபாகரனுடன் இருப்பது போன்ற போட்டோவை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என்று இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கூறியிருந்த நிலையில் தற்போது இலங்கையைச் சேர்ந்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் புகைப்படக் கலைஞர் அமிர்தாஸ் தற்போது சீமான் பிரபாகரனுடனான சந்திப்பு குறித்து பிரபல சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் சில நிமிடங்கள் மட்டும்தான் பிரபாகரன் சீமானை சந்தித்தாராம்.

அப்போது போர் உச்ச கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்ததால் சீமான் சொன்னது போன்று பிரபாகரன் அவருக்கு சமைத்துக் கொடுக்கவில்லை. அதேபோன்று பிரபாகரன் மனைவி மதிவதினியும் வகை வகையான அசைவ உணவுகளை சீமானுக்கு சமைத்துக் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார். அதன் பிறகு எல்லளான் படப்பிடிப்பின் போது திரைப்பட இயக்குனரான சீமான் அங்கு சென்று நிலையில் சில நாட்கள் மட்டுமே தங்கியதாகவும் அதன் பிறகு மீண்டும் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறினார்.

அதோடு அங்கிருந்த வகை வகையான துப்பாக்கிகளை பார்த்து அதனுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று சீமான் விருப்பப்பட்டதால் தான் அவரை அதுபோன்று வைத்து புகைப்படம் எடுக்க வைத்ததாக கூறியுள்ளார். சீமான் துப்பாக்கிகளுடன் இருக்கும் போட்டோவில் படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்படும் தெர்மாகோல் அருகில் இருப்பது அந்த போட்டோவை கவனித்தால் நன்றாக தெரியவரும் என்று கூறியுள்ளார். அதோடு அந்த போட்டோவை பார்த்தால் கை இடுக்குகளில் சீமான் துப்பாக்கியை வைத்திருப்பார்.

அங்கிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் இலங்கை ராணுவ முகாம் இருந்ததால் அப்படியெல்லாம் துப்பாக்கியை வைத்து சுட முடியாது. அதன்பிறகு சீமானுடன் ஒளிப்பதிவாளர் சந்தோஷம் இருந்த நிலையில் பிரபாகரனுடன் அவர் போட்டோ எடுத்தது உண்மைதான். ஆனால் அவர் எடுத்த போட்டோவை அவரிடம் கொடுக்கவே இல்லை. ஏனெனில் அப்போதே சீமான் புகழ் விரும்பியாக இருப்பது விடுதலைப்புலிகளுக்கு இயக்கத்திற்கு தெரிய வந்ததால் அந்த போட்டோவை கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததனர்.

இந்த போட்டோவை சீமான் தமிழ்நாட்டுக்கு சென்ற பிறகு வெளியிடலாம் என்பதால் படப்பிடிப்பில் ஈடுபட்டவர்களுக்கு பிரச்சனை வரக்கூடும் என்பதால் அந்த போட்டோவை தரவில்லை என்றார். அந்த சமயத்தில் இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் எல்லளான் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த கரும்புலி இளங்கோவனாக கதாபாத்திரம் ஏற்றி நடித்த புகழ்மாறன் உள்ளிட்ட வீரப்புலிகள் மரணமடைந்தனர்.

ஆனால் புகழ் மாறன் தான் தனக்கு பாதுகாவலராக இருந்தார் என்று சீமான் கூறுகிறார். அந்த சமயத்தில் பிரபாகரனை மீண்டும் மீண்டும் சந்திக்க வேண்டும் என்று சீமான் நச்சரித்துக் கொண்டே இருந்ததால் அவரை உடனடியாக அங்கிருந்து அனுப்பிவிட்டனர். சீமான் பிரபாகனுடன் இருப்பது போன்ற அனைத்து போட்டோக்களும் பொய்தான். இதனை என்னால் டிஜிட்டல் மூலமாக நிரூபிக்க முடியும் அனைத்து ஆதாரங்களும் இருக்கிறது. சீமான் கூறும் பொய்களால் விடுதலைப் புலிகளுக்கு அவமானம் என்று கூறினார்.