சேலம் மாவட்டத்தில் உள்ள பாரப்பட்டி கிராமத்தில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கூலி வேலை பார்த்து வருகிறான். கடந்த ஒரு ஆண்டாக சிறுவனும் உறவினரான 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் சிறுவனை அழைத்து தங்களது மகளுடம் பழகக் கூடாது என கண்டித்தனர். அதன்பிறகும் இருவரும் பேசி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் இருக்கும் செங்கல் சூளையில் வைத்து சிறுவனும், சிறுமியும் பேசிக்கொண்டிருந்ததை சிறுமியின் பெற்றோரும் உறவினர்களும் பார்த்தனர்.

இதனால் கோபமடைந்த அவர்கள் சிறுவனை மரத்தில் கட்டி வைத்து கைகளாலும், பிளாஸ்டிக் குழாயாலும் சரமாரியாக தாக்கினார். இதுகுறித்து அறிந்த சிறுவனின் பெற்றோரும் உறவினர்களும் சிறுமியின் உறவினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு படுகாயமடைந்த சிறுவனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் சிறுமியின் தந்தை உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.