துக்ளக் ஆண்டு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி கேள்வி மற்றும் பதில்கள் வழங்கினார். அதில் பேசிய அவர்,  பொன்முடி கேஸை பற்றி படித்து இருப்பீர்கள். பொன்முடி கேஸை பற்றி பின்னாடி சொல்லுறேன். இப்போது  உங்களுக்கு சுருக்கமாக சொல்கிறேன்.  அது 1996 – 2001 இல் நடந்த ஊழல். அதற்குப் பிறகு அந்த கேஸை ஜெயலலிதா போட்டார்கள்.  2004இல் மேஜிஸ்திரேட் இந்த கேசுல ஒண்ணுமே இல்லைன்னு தள்ளுபடி பண்ணி விட்டார்கள்.

அதை மறுபடியும் உய்ரநீதிமன்றத்திற்கு கொண்டு போனால், அதில் ஒன்றும் இல்லை  என்று உயர்நீதிமன்றமும் சொல்லிவிட்டது. உச்சநீதிமன்றத்திற்கு போய்,  2015ல் உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் ஆதாரம் இருக்கிறது. இதை நீங்கள் இன்வெஸ்டிகேட்  பண்ண வேண்டும் என்று 1995இல்  நடந்ததற்கு 2015ல் உச்சநீதிமன்றம் கூறுகிறது,  இதை விசாரணை செய்ய வேண்டும் என்று…. அதை விசாரணை செய்து,

ஒரு ஸ்பெஷல் கோர்ட் அமைக்கின்றார்கள். சாதாரண கோட்டாக இருந்தால் ஒரு மாதிரியாக மேனேஜ் பண்ணி விடுவார்கள் என்று விசேஷ கோர்ட்  அமைத்து, அவர்களுக்கு இந்த கேஸ் கொடுக்கப்படுகிறது. அந்த கேஸ் நடந்து 169 சாட்சியங்கள் விசாரித்து விட்டார்கள். 2022 ஜூனில் திடீரென்று அந்த மேஜிஸ்திரேட் ஒரு லெட்டரில் எழுதுகிறார்.இந்த கேஸை சட்டுன்னு முடிக்க சொல்லி இருக்கிறார்கள். அதனால்  விசேஷமான 4 விடுமுறை நாட்களில் இந்த கேசை நடத்திவிடலாம் என்று நினைக்கிறேன் என எழுதி இருக்கின்றார்.

இந்த கேஸ்  வெங்கடேஷ் ஜட்ஜ் கிட்ட போகுது …. அவர் தான்  கிரிமினல் கேஸை பார்க்கின்ற நீதிபதி….. என்னடா இந்த மாதிரி எல்லாம் ஒரு ரிக்குவஸ்ட் வருகின்றது என்று அவருக்கு ஏதோ ஒரு மாதிரி இருக்கிறது. நீங்கள் ஒன்றும் பண்ண வேண்டாம்…. நீங்களே இந்த கேஸை  நடத்தக்கூடாது என்று சொல்லிவிட்டார். இதை அவசரமாக நடத்துவதால் இதற்கு பின்னால் ஏதோ ஒரு பின்னணிஇருப்பது அவருக்கு புரிந்து விட்டது. அப்ப என்ன பண்ணுகிறார் ? ரொம்ப முக்கியம்…..  நாம் எல்லோரும் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

இந்த கேஸை  விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு  மாற்றலாம் என இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சென்னையில் இருக்கிறவர்கள் நம்ம தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்கள்.  எதற்காக…? அதை  உச்சநீதிமன்ற நீதிபதி பாவம்,  அவருக்கு ஏற்றுவிட்டார்கள். இது என்னவென்று அவருக்கு விஷயம் தெரியாது. உடனே இந்த கேஸ்  வேலூருக்கு டிரான்ஸ்பர் ஆகிறது. நாலே நாளில் 172 சாட்சியங்களை விசாரித்து,  370 டாக்குமெண்ட் படித்து,  280 பேஜில் ஒரு ஜட்ஜ்மெண்ட் எழுதி,  இவர் நிரபராதி அப்படின்னு சொல்லுகிறார். இந்த மாதிரி ஒரு ஜூடிசியல் சிஸ்டம்  இருக்கும் பொழுது மோடி என்ன பண்ண முடியும் ? யார் தான் என்ன பண்ண முடியும் ? அதனால் நாணயமாக இருக்கின்ற ஓரிரு நீதிபதி மூலமாக தான் இந்த மாதிரி கேஸ் எல்லாம் வருது. வெங்கடேஷ் என்ன பண்ணார் என்று தெரியுமா ?

இந்த கேசை தன் கையில் எடுத்து,  இது  விசாரிக்கப்பட வேண்டிய கேஸ் என்று சொன்னதில் பெரிய பூகம்பமே கிளம்பியது. அவர் பேர் எல்லாம் சொன்னார்கள்….  பெரியார் அப்பொழுதே சொன்னார்…. நாம சட்டம் பாஸ் பண்ணுன்னா என்ன ?  பாப்பான் தான்  நீதிபதியாக இருந்து எல்லாத்தையும் நடத்துவான் என்று…. அந்த மாதிரி அளவுக்கு நிஜமான பிரச்சாரம் நடந்தது. அவர் அதை கண்டு  பயப்படவில்லை. நான் தான் இதை கேசை நடத்துவேன் என்று சொன்னார்.  உச்சநீதிமன்றம் கடைசியில் கூறியது….  இந்த மாதிரி எல்லாம் ஒரு ஜட்ஜ் இருப்பது,  நமக்கு கடவுள் வர பிரசாதம் என்று கூறியது. அதனால் ஒரு பிரைம் மினிஸ்டர்……  ஏராளமான அதிகாரம் கொடுத்து பிரைம் மினிஸ்டர் வந்துவிட்டதால்,  இந்த லஞ்சம் எல்லாம் குறைந்து விடும் என்று நினைக்காதீர்கள். இது ஒரு பிரம்மாண்டமான பிரச்சனை என பேசினார்.