CGLE-2024 க்கான விண்ணப்ப கால கெடுவை பணியாளர் தேர்வு ஆணையம் நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. மொத்தம் உள்ள 17 ஆயிரத்து 727 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்ட நிலையில் ஜூலை 24ஆம் தேதி உடன் காலக்கெடு நிறைவடைந்தது. இந்த நிலையில் ஜூலை 27 ஆம் தேதி இரவு 11 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாகவும் அதுவரை விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

ஆன்லைனில் கட்டணம் செலுத்தி ஜூலை 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு முடித்தவர்கள் ssc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.