
இந்தியாவில் கொரோனா தொற்று காலத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 18 மாதங்களாக DR, DA தொகையை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. இந்த 18 மாத நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும் என்று தொழிலாளர் அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. கொரோனா தொற்றின் போது 18 மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை மீண்டும் வழங்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, அரசிடம் அதற்கான எந்த திட்டமும் இல்லை என தெரிவித்துள்ளார். 18 மாத ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு ரூ.34,402 கோடி சேமிக்கப்பட்டு கொரோனாவால் ஏற்பட்ட நிதி இழப்பை சரிகட்ட பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். எனவே 18 மாத நிலுவைத் தொகை இனி கிடைக்காது என்ற செய்தி மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.