காதல் கவிதை என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர் இஷா கோபிகர். இவர் விஜய்யோடு நெஞ்சினிலே என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை குறித்து பேசி இருக்கிறார். அதாவது 18 வயதாக நான் இருக்கும் பொழுது படுக்கைக்கு என்னை ஒருவர் அழைத்தார்.

அப்பொழுது மேனேஜர்கள் என்னை தவறான முறையில் தொட்டு நடிகர்களுடன் நட்பாக இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். மேலும் ஒரு முன்னணி நடிகர் என்னை தனியாக சந்திக்கும்படி கூறினார். என்னுடைய ஓட்டுனரோ அல்லது வேறு யாரும் இல்லை என்று கூறினார். ஏனெனில் எனக்கும் சில நடிகைகளுடன் தொடர்பு இருப்பதாக வதந்திகள் பரவுகிறது. எனவே நாம் இருவரும் சந்திப்பதை வேறு யாரும் பார்க்க கூடாது என்றும் கூறினார். அவருடைய நோக்கம் எனக்கு புரிந்து விட்டதால் சந்திக்க மறுத்தேன் என்று கூறியிருக்கிறார்.