இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்களும் இருந்த இடத்திலிருந்து கொண்டே அனைத்து வேலைகளையும் எளிதில் முடித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் இதனை பயன்படுத்திக் கொள்ளும் மோசடிக்காரர்கள் தினம்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக அரசு மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.

இந்நிலையில் அரசு திட்டங்கள் குறித்து விளக்கும் பிரபல youtube சேனல் ஒன்று 18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் பிரதான் மந்திரி லத்லி லட்சுமி யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என தகவல் கூறியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசின் PIB Fact Check குழு, மத்திய அரசால் அப்படி ஒரு திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. அதேசமயம் இது போன்ற போலி செய்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.