
இந்தியாவில் வாழும் அனைத்து குடிமக்கள்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது. இது ஜனநாயக கடமையாகும். இவ்வாறு வாக்களிப்பதற்கு வாக்காளர் அடையாள அட்டை முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்களிக்க தகுதியானவர்கள். எனவே அவர்கள் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை தேவைப்படுகிறது. இதனை பெறுவதற்கு தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in செல்ல வேண்டும்.
அதன் பின் மொபைல் எண் மற்றும் OTP பயன்படுத்தி login செய்ய வேண்டும். பின்னர் Register as New Voter – Form 6 என்பதை கிளிக் செய்து கேட்கப்படும் தகவலை கொடுக்க வேண்டும். முகவரி சான்றுக்காக ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து கொள்ளவும். தற்போது விண்ணப்ப ஐடி ஒன்று வழங்கப்படும். அதனை பயன்படுத்தி விண்ணப்ப நிலையை சரிபார்த்துக் கொள்ளலாம்.