உலகின் நீளமான சைக்கிளை டச்சு பொறியாளர்கள் 8 பேர் சேர்ந்து கண்டுபிடித்துள்ளனர். இந்த சைக்கிள் 180 அடி நீளம் இருக்கிறது. இதனால் தற்போது உலகின் நீளமான சைக்கிள் என்ற பெருமையை பெற்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெர்னி ரியான் என்பவர் 155 அடி நீளம் உள்ள ஒரு சைக்கிளை கண்டுபிடித்திருந்தார். இதுதான் உலகின் நீளமான சைக்கிள் என்ற பெருமையை பெற்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது.

ஆனால் தற்போது இந்த சாதனையை டச்சு பொறியாளர்கள் முறியடித்துள்ளனர். இந்த குழுவில் இருந்த இவான் ஷால்க் (38) என்ற பொறியாளர் சிறுவயது முதலே பெரிய சைக்கிளை உருவாக்க வேண்டும் என்ற கனவில் தற்போது இப்படி ஒரு சைக்கிளை உருவாக்கியுள்ளார். கடந்த 60 வருடங்களில் உலகின் நீளமான சைக்கிள் என்ற சாதனை பலமுறை முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மனியில் கடந்த 1965 ஆம் ஆண்டு 26 அடி நீளம் உள்ள சைக்கிள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது தான்‌ உலகின் முதல் நீளமான சைக்கிள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.