அமெரிக்காவில் லூசியானாவில் 37 வயது பெண் கடந்த 1994 ஆம் ஆண்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நான்கு பேர் அந்த பெண்ணை கொன்று உடலை 180 துண்டுகளாக வெட்டி வீசினர். இந்த வழக்கில் மூன்று பேர் 18 வயதுக்கு கீழ் இருப்பதால் அவர்களுக்கு அமெரிக்கா சட்டத்தின்படி பரோலில் வெளியே வர முடியாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது 19 வயதான கிரேசன் என்பவருக்கு மட்டும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

நீண்டகால சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு கிரேசனுக்கு இன்று காலை அலபாமா சிறையில் நைட்ரஜன் வாயு மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவில் நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்றாவது நபர் இவர்தான். இந்த ஆண்டு இதுவரை 22 பேருக்கு அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.