பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் ஆன பூஷன் சரண்சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்திருந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரியில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டம் இந்திய அளவில் கவனம் எடுத்த நிலையில் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஏப்ரல் 23ஆம் தேதி முதல் மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனிடையே புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது தங்களுக்கு நீதி வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் புதிய நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக சென்ற போது அவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்து சென்றது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் விஷயம் குறித்து பேசிய அண்ணாமலை கவிஞர் வைரமுத்துவை வம்புக்கு இழுத்து பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர், வைரமுத்து மேல் 19 பாலியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவர் மேல் ஏன் ஒரு FIR கூட போடவில்லை. தமிழ்நாட்டில் செங்கோல் வளையவில்லையா?. பிரிஜ் பூஷன் மீது 2 வழக்குகளே பதியப்பட்டுள்ளன என புது விளக்கம் கொடுத்துள்ளார்.