உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் மும்பையில் வேலை பார்த்து வருகிறார். கௌசாம்பில் இவருடைய மனைவி வசித்து வந்த நிலையில், அவருக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜய் என்ற 19 வயது இளைஞரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி அன்று விஜய்யோடு ரஞ்சித் மனைவி தன்னுடைய அறையில் உல்லாசமாக இருந்துள்ளார்.

அப்போது திடீரெனெ மும்பையில் இருந்து கணவர் ரஞ்சித் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது இந்த அருவருப்பை நேரில் பார்த்ததால் கடும் ஆத்திரமடைந்த ரஞ்சித், விஜய்யை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்பிறகு இரவில் வெளியே சென்று விஜய்யை கொன்று சடலத்தை வேறு பகுதியில் வீசி இருக்கிறார். இதுகுறித்து விசாரணையில் காவல்துறையினர் குற்றவாளியான ரஞ்சித்தை கைது செய்துள்ளார்கள்.