குமரி மாவட்டம் வள்ளவிளை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து, அங்கேயே தங்கி சட்டவிரோதமாக பாஸ்போர்ட் பெற்றதாக இலங்கை புலம்பெயர் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

1990-ம் ஆண்டு இந்தியா வந்த ஜார்ஜ் வாஷிங்டன் என்ற இவர், சிவகாசி அருகே உள்ள முகாமில் தங்கி பள்ளி, கல்லூரி படிப்புகளை முடித்துள்ளார். கல்லூரி படிக்கும் போது, வள்ளவிளையைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு, மனைவியுடன் அங்கேயே தங்கி ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார்.

 

தனது மனைவியின் முகவரியைப் பயன்படுத்தி ஆதார் அட்டை பெற்ற ஜார்ஜ் வாஷிங்டன், அதை வைத்து சட்டவிரோதமாக பாஸ்போர்ட் எடுத்துள்ளார். இந்த விவகாரம் வெளியில் வந்ததையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம், குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.