
ஜெயிலர் திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழாவை இலவசமாக காண்பதற்கான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ள ஜெய்லர் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பாடல்களும் அபார வெற்றியை பெற்ற நிலையில், படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா ஜூலை 28ஆம் தேதி நடைபெற இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. ஆடியோ லான்ச் குறித்து தொடர்ச்சியாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் அப்டேட்டுகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வர,
தற்போது இசை வெளியீட்டு விழாவை நேரில் காண விரும்பும் ரசிகர்களுக்கான புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல் ஆயிரம் நபர்களுக்கு இசை வெளியீட்டு விழாவை காண்பதற்கான இலவச டிக்கெட்டுகளை வழங்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் twitter பக்கத்தில் ட்விட் செய்துள்ளது. jailer .sunpictures.in என்ற இணையதளத்தில் முதலில் ரிஜிஸ்டர் செய்யும் ஆயிரம் நபர்களுக்கு மட்டும் இந்த இலவச டிக்கெட் வழங்கப்படும். இந்த ரிஜிஸ்ட்ரேஷன் போர்ட்டல் நாளை மதியம் சரியாக ஒரு மணிக்கு ஓபன் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1000 FREE PASSES ready-ah irukku! Neengalum ready-ah irunga! Nalaiku 1 PM santhipom😎 #JailerAudioLaunch💥@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi #Jailer pic.twitter.com/h9cVfAZj6j
— Sun Pictures (@sunpictures) July 23, 2023