விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது கொடி ஏற்ற முடியவில்லை என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இது பற்றி அவர் கூறியதாவது, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 4 எம்எல்ஏக்கள் மற்றும் 2 எம்பிகள் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் நம்மால் கொடியேற்ற முடியவில்லை.

நாம் கொடியேற்றும்போதுதான் அதிகாரிகள் சட்டம் பேசுகிறார்கள். அதிகாரிகளை செயல்பட வைக்க நாம் அரசியல் ரீதியாக இன்னும் வலுப்பெற வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களோடு இணைந்து நம்முடைய கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதுதான் வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும் இந்த நிலை மாறி விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்னும் அரசியலில் வலுப்பெற வேண்டும் என்று கூறினார்.