
மதுரையில்கும்பலால் கடத்தப்பட்ட 14 வயது சிறுவன் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியைச் சேர்ந்த 7ம் வகுப்பு படித்து வரும் சிறுவன் ஒருவரை கடத்தி, ரூ.2 கோடி பணம் தராவிட்டால் சிறுவனைக் கொலை செய்வோம் என்று மர்ம கும்பல் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் காவநிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனால் போலீசில் பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் அக்கும்பல் சிறுவனை 4 வழிச்சாலையில் இறக்கிவிட்டு காரில் தப்பி ஓடியுள்ளது. இதையடுத்து, தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.