
கண்டிவாலியில் நிகழ்ந்த கொடூரச் சம்பவம் ஒன்றில் சமூக சேவகரின் தலையீட்டால் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
மும்பையின் கண்டிவாலி பகுதியில் நிகழ்ந்த கொடூரமான பாலியல் துஷ்பிரயோகம் சம்பவம் அப்பகுதியை உலுக்கியுள்ளது. இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ரஹீம் பதான் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆறு மற்றும் நான்கு வயதுடைய இந்த சிறுமிகளை நீண்ட காலமாக துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் பதானின் கொடுமைகளை அனுபவித்த போதிலும், அவரை எதிர்த்து குரல் கொடுக்க பயந்தனர். பதானின் மிரட்டல்களால் அச்சமடைந்த அவர்கள், இந்த கொடூரச் செயல்களை மறைத்து வந்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் ஒரு சமூக சேவகர் இந்த சம்பவம் குறித்து அறிந்து காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் ரஹீமை கைது செய்ய முயன்ற போது அவர் தப்பி ஓடினார். பின் போலீசாரின் துரித நடவடிக்கையால் , தப்பி ஓடிய ரஹீமை 3 மணி நேரத்தில் அதிகாரிகள் கைது செய்தனர்.