
ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்
இந்நிலையில் சம்பவ நாளான்று வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து பெண் மற்றும் 2 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். பயங்கரமான வெடி சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது வீடு முழுவதும் கரும் புகை சூழ்ந்துள்ளது.
இதனால் அவர்கள் காவல்துறையினருக்கு இச்சம்பவத்தை பற்றி தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண் மற்றும் 2 குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் வீட்டில் ஆய்வு செய்தபோது சமையலறையில் இருக்க வேண்டிய சிலிண்டர் பெட்ரூமில் இருந்துள்ளது.
அதன்பின் காவல்துறையினர் பெண்ணின் குடும்பத்தினரை பற்றி அக்கம் பக்கத்தில் விசாரணை நடத்தினர். இதில் அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் அவருக்கு கள்ள காதலன் இருப்பது தெரிய வந்தது. அந்த பெண்ணின் கள்ளக்காதலனும் தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற்றுவருவதும் தெரியவந்துள்ளது.
மேலும் காவல்துறையினர் இச்சம்பவத்தை பற்றி வழக்கு பதிவு செய்ததுடன் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.