நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் எட்வர்ட் துரை. 63 வயதான இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு ஒரு மகன் இருந்த நிலையில் அவர் திடீரென்று இறந்து விட்டதால் அவர் அனாதை ஆசிரமத்தில் இருந்து 11 மற்றும் 12 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தத்தெடுத்து வளர்த்த அந்த சிறுமிகளிடம் ஆபாச படங்களை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தொலைபேசி மூலமாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு எட்வர்ட் துரயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி உள்ளனர். மேலும் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.