
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயபால். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஜெயபால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஜெயபாலின் மனைவி புளியந்தோப்பு பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி இருந்து மருத்துவமனைக்கு சென்று வந்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு உறவினர் வீட்டிற்கு வந்த ஜெயபால் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் சிறுமியை அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு அளித்து சென்று ஜெயபால் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயபாலை கைது செய்தனர். என்ன வேலைக்கு சரிதான் நீதிமன்றம் ஜெயபாலுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தணணையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.