
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளானது முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டது. இந்நிலையில் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களுடைய பதிவண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Notification பகுதியில் 18.06.2024 அன்று பிற்பகல் வெளியிடப்பட உள்ளது.\
எனவே மறு கூட்டல்/ மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டுமே மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு மறுகூட்டல் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.