தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் கடந்த இரண்டு மாத பொருள்களை ஜூலை மாதம் வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது.

ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருள்களை மக்கள் இந்த மாதமும் பெறலாம் என்று உணவு வழங்கல் துறை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் ஜூன் மற்றும் ஜூலையில் அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் போன்றவற்றை வாங்காதவர்கள் ஜூன் 31 இன்றுக்குள் வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு தடையின்றி வழங்கும் வகையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதால் அனைவருக்கும் அனைத்து பொருட்களையும் வழங்க ரேஷன் கடை ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது