சென்னையில் உள்ள டிபி சத்திரம் பகுதியில் அமுதா (29) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகே கடந்த வருடம் சில இளைஞர்கள் மது போதையில் ஆபாசமாக பேசியுள்ளனர். இது தொடர்பாக அமுதா டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு கடந்த வருடம் மே மாதம் சிறையில் இருந்து வெளியே வந்த சந்தோஷ் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து அமுதாவின் அக்கா கணவரை கத்தியால் குத்தியுள்ளார். இது தொடர்பான வழக்கில் சந்தோஷ் மற்றும் அவருடைய நண்பரான மனோஜ் குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் சிறையில் இருந்து வெளியே வந்தனர். அவர்கள் அமுதாவின் மீது கோபத்தில் இருந்ததால் பெட்ரோல் குண்டை அவர் வீட்டின் மீது வீசி உள்ளனர். இதை பார்த்த அதிர்ச்சியடைந்த அமுதா மற்றும் அவருடைய அக்கா அமலா அங்கிருந்து தப்பி ஓடினர். பெட்ரோல் குண்டு பட்டத்தில் வீட்டின் சுவர் தீப்பிடித்து எரிந்தது. இதற்கிடையில் மனோஜ் குமார் அமுதாவுக்கு கொலை மிரட்டல் வைத்து whatsappல் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இதனால் தனக்கு பாதுகாப்பு தரும்படி அமுதா காவல் நிலையத்தில் கேட்டுள்ளார். இந்த சம்பவம்  தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மனோஜ் குமார், சந்தோஷ் உட்பட 4 பேரை வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.