கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சபரி. இவரது மனைவி ஷாலினி செவிலியராக வேலை பார்க்கிறார். திருமணமான 6  மாதத்திற்குள் ஷாலினிக்கு பிரகாஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அதன் பிறகு சபரியை பிரிந்த ஷாலினி பிரகாஷை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை உள்ளது. இதனையடுத்து கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் ஷாலினி பிரகாஷை பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். பின்னர்  வேலை பார்த்து கொண்டிருந்த இடத்தில் தம்பிதுரை என்பவருடன் ஷாலினிக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாடைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்தனர். தம்பிதுரைக்கு நிர்மலா என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் தம்பிதுரை ஷாலினியின் வீட்டிற்கும், தனது மனைவியின் வீட்டிற்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது நிர்மலாவுக்கு தனது கணவரின் மீது சந்தேகம் ஏற்பட்டது.

கடந்த 13-ஆம் தேதி தம்பிதுரை வீட்டை விட்டு வெளியே சென்ற போது நிர்மலா தனது உறவினர்கள் 10 பேருடன் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது தம்பிதுரை ஷாலினியின் வீட்டிற்கு சென்றது தெரியவந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நிர்மலா தனது உறவினர்களுடன் இணைந்து ஷாலினியையும், தம்பி துறையையும் சரமாரியாக தாக்கினார். அதுமட்டுமில்லாமல் நிர்மலா தான் கொண்டு வந்த விஷத்தை ஷாலினியின் வாயில் ஊற்றியதாக கூறப்படுகிறது.

இதனால் மயங்கி விழுந்த ஷாலினி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நிர்மலாவை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் அவரது உறவினர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.