டெல்லி பாவனா பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ராம்பிரகாஷ் என்ற ஊழியர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தீபாவளி முன்னிட்டு தொழிற்சாலையை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். நான்காவது மாடியில் ராம்பிரகாஷ் அலங்கரித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அஸ்லாம் என்ற நபர் தனக்கு இரண்டு ரொட்டி தருமாறு கேட்டுள்ளார்.

ராம் பிரகாஷ் ரொட்டியை கொடுக்க மறுத்துவிட்டு சொந்த பணத்தில் வாங்கி சாப்பிடுமாறு கூறியுள்ளார். இதில் கோபமடைந்த அஸ்லாம் ராம் பிரகாஷை தாக்க தொடங்கினார். இருவருக்கிடையே மோதல் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் ராம்பிரகாசை நான்காவது மாடியில் இருந்து அஸ்லாம் கீழே தள்ளி விட்டார்.

இதில் ராம் பிரகாஷ் உயிரிழந்த நிலையில் அஸ்லாம் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி சென்ற அஸ்லாமை கைது செய்ததோடு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.