
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் டி20 போட்டி தொடங்கிய நிலையில் முதல் தொடரை இந்திய அணி வென்றது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2-வது டி20 தொடரில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்கள் குவித்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங், அக்சர்படேல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அதன் பிறகு மழை பெய்ததால் ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமானது. இதனால் போட்டியின் ஓவர்கள் குறைக்கப்பட்டது. அதன்படி இந்திய அணி 7.3 ஓவர்களில் 72 ரன்கள் எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இறுதியில் இந்திய அணி 6.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு இலக்கை கடந்தது. இதன் மூலம் இரண்டாவது டி20 தொடரையும் இந்திய அணி வென்றுள்ளது.