
பீகார் மாநிலத்தில் ரஞ்சித் ஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் திருமணம் ஆனது. ரஞ்சித்திற்கும் அவரது மனைவிக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஞ்சித் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் ரஞ்சித் தனது முதல் மனைவியை வன்கொடுமை செய்து வந்துள்ளார். சொத்துக்காக அடிக்கடி ரஞ்சித் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
சம்பவம் நடைபெற்ற அன்று ரஞ்சித்தின் முதல் மனைவி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ரஞ்சித் தனது இரண்டாவது மனைவியுடன் இணைந்து முதல் மனைவியை தாக்கி அவரது பிறப்புறுப்பில் பெவிகுயிக்கை தடவியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.