
சென்னை மாவட்டம் வானகரத்தில் லிப்டில் சென்ற பெண்ணிடம் வாலிபர் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்யும் பெண் லிப்டில் இருந்துள்ளார். அப்போது ஒரு வாலிபர் அந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டார்.
உடனே அந்த இளம்பெண் கத்தி கூச்சலிட்டார் இதனால் பயத்தில் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே குடியிருப்பில் மர்ம நபர் நுழைந்து தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார். இதனால் குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.