நாட்டில் ரேஷன் கார்டு என்பது ஒரு முக்கியமான ஆவணமாகும். இதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு நியாய விலை கடைகள் மூலமாக அத்யாவசியமான பொருள்கள், மலிவு விலையில் கிடைக்கிறது. அந்த வகையில் தமிழகத்திலும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியமான பொருள்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது. அதோடு மாநில அரசின் திட்டங்களுக்கும் ரேஷன் கார்டுகள் முக்கிய ஆவணமாகும்.

இந்நிலையில் நீண்ட காலமாக தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த மாதம் முதல் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி புதிய ரேஷன் அட்டைகளுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் 2.24 லட்சம் பேருக்கு புதிய அட்டைகள் வழங்கப்பட இருக்கிறது. மேலும் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் வீடு தேடி அனைவருக்கும் ரேஷன் கார்டுகள் வர இருக்கிறது. இது புதிய பயனாளிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.