
பரிதாப் மாவட்டத்தில் திறந்திருந்த வீட்டில் மாடு மற்றும் காளை உள்ளே சென்ற நிலையில் நீண்ட நேரம் வெளியே வராததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது பரிதாப் மாவட்டத்தில் டபுவா காலனியில் ராகேஷ் சாஹு என்பவர் தனது மனைவி மற்றும் தாயாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இவருடைய தாயார் கதவை திறந்து வைத்துவிட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது ராகேஷின் மனைவி பூஜை அறையில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில் கதவு திறந்திருந்ததால் தெருவில் நின்று கொண்டிருந்த மாடு மற்றும் காளை வீட்டிற்குள் நுழைந்த நிலையில் நேரடியாக படுக்கையறைக்குள் சென்றது. அதனை கண்டு பயந்த ராகேஷின் மனைவி படுக்கை அறையில் உள்ள அலமாரிக்குள் சென்று தன்னை பாதுகாத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து அதனை விரட்ட அவருடைய தாய் முயன்ற போது வெகு நேரமாகியும் மாடு மற்றும் காளை படுக்கை அறையில் இருந்து வெளியே வராததால் 2 மணி நேரத்திற்கு மேலாக அந்தப் பெண் அலமாரிக்குள் பூட்டிக் கொண்டிருந்தார்.
फरीदाबाद में घर के अंदर घुसे गाय और सांड, एक घंटे तक किया तांडव pic.twitter.com/R8AdyEGWv0
— Rahul (@rahuljuly14) March 27, 2025
அந்த சமயத்தில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து மாடு மற்றும் காளையை வெளியே விரட்ட முயற்சித்தனர். அப்போது நாய் ஒன்று சத்தம் போட்டது. அந்த சத்தத்தை கேட்டு மாடு மற்றும் காளை இரண்டும் வீட்டை விட்டு வெளியே வந்தது. அதன் பின்னர் ராகேஷின் மனைவியை அருகில் இருந்தவர்கள் அலமாரியில் இருந்து பாதுகாப்பாக மீட்டனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.