
இந்தியாவின் மொபைல் காங்கிரஸ் 2024 இன் 8 வது பதிப்பை பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் jio-வின் நிறுவனர் ஆகாஷ் அம்பானி, தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது, டிஜிட்டல் தொலைநுட்பத்தை இந்தியா ஜனநாயக படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து விழாவில் பேசிய ஆகாஷ் அம்பானி, பிரதமர் நரேந்திர மோடிக்கு இரண்டு கோரிக்கைகளை வைத்தார். செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இந்திய வாடிக்கையாளர்களின் தகவல்களை சேமித்து வைக்க இந்தியாவில் தகவல் மையங்களை உருவாக்க வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சிகள், தொலைத்தொடர்பு வசதிகள் அதிவேகமாக வளர்வதால் டேட்டா சென்டர் பாலிசி 2020 மேலும் உயர்தரமாக மேம்படுத்த வேண்டும் என தனது கோரிக்கைகளை முன்வைத்தார்.