
தமிழ்நாட்டில் 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் நிலையில் தற்போது புதிதாக 2 வந்தே பாரத் ரயில் சேவைகள் இன்று தொடங்கப்பட இருக்கிறது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்த புதிய ரயில் சேவைகளை காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார். சென்னை எழும்பூர் – நாகர்கோவில் மற்றும் மதுரை – பெங்களூரு இடையே இயக்கப்படும் இந்த புதிய ரயில்கள், தமிழக மக்களுக்கு விரைவான மற்றும் வசதியான பயணத்தை வழங்கும்.
இந்த ரயில்கள் சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் விழுப்புரம், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் நின்று செல்லும். அதேபோல், மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் கரூர், நாமக்கல், சேலம் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இந்த புதிய ரயில் சேவைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை இணைத்து, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும். மேலும், சுற்றுலாத் துறையையும் ஊக்குவிக்கும். தமிழக மக்கள் இந்த புதிய ரயில் சேவையை வரவேற்றுள்ளனர்.