
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்பேட்டையில் இருக்கும் அழகு நிலையத்தில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஷிம் ரெய்யோ ஜிமிக்கி என்பவர் சிகை அலங்காரம் செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஷிம் மோட்டார் சைக்கிளில் மேடவாக்கத்தில் இருந்து வேளச்சேரி நோக்கி சென்றார். இந்நிலையில் பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகர் சிக்னல் அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த கார் ஷிம் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் உட்பட 2 மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் வலுகாயமடைந்த ஷிம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த முரளி, சிவா, ராஜா ஆகிய 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மேரி சோபியா என்ற பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.