
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், போற போக்குல சொல்லுவான் திருமாவளவன் ரெண்டு சீட்டு ஒட்டிக்கிட்டு இருக்காரு, தொங்கிட்டு இருக்காரு, ரெண்டு சீட்டுக்கு…. ஒரு சீட்டுக்கு என சொல்வது நம் மேல் இருக்கிற கால்புணர்ச்சியால் சொல்லக்கூடியது. இது எவ்வளவு பெரிய போராட்டம். இது எவ்வளவு பெரிய சாதனை.
தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும்… எந்த தேர்தலிலும்… இத்தனை சதவீதம் வாக்குகள் இருக்கிறது என்பதை நிரூபிக்காமல் ஒரு கட்சி தொடர்ந்து திமுக – அதிமுக கூட்டணியிலே பயணிக்கிறது. தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இந்த சாதனையை படைத்த இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி. இது சாதாரணமான விஷயம் கிடையாது.
எலக்சன்ல தனித்து நின்று போட்டியிடுறவங்களுக்கு தான் தெரியும். ரொம்ப ஈசியாய் உன் பிரசன்டேஜ் என்ன ? உனக்கு என்ன ஓட்டு இருக்கு ? அப்படின்னு சொல்லிட முடியும்… அனால் வசிகவை சொல்ல முடியாது. விடுதலைச் சிறுத்தைகள் செயல்பாட்டு களத்திலும், கருத்தியல் களத்திலும் வலிமையோடு இருக்கிறது என்பதை தொடர்ந்து பதிவு செய்து கொண்டே இருக்கின்றோம். ஏதோ எலக்சனுக்காக வந்து முகம் காட்டுற கட்சி இல்லை. இது 24 மணி நேரமும் உயிர்போடு இருக்கின்ற இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
எல்லா களங்களிலும் முனைப்போடும், முன்னணியில் நிற்கின்ற கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. என்னை தூக்கி பேசுறதுக்கு ஆள் இல்லாமல் இருக்கலாம்…. என்னை உயர்த்தி பிடிப்பதற்கு ஊடகங்கள் விரும்பாமல் இருக்கலாம்…. எனக்கு பரிந்துரை செய்வதற்கு பெரிய தலைகள் இல்லாமல் இருக்கலாம்…. ஆனால் என்னை தவிர்க்க முடியாது. இந்த இயக்கத்தை தவிர்க்க முடியாது…. சிறுத்தைகளை தவிர்க்க முடியாது என தெரிவித்தார்.