
கோவை மாவட்டம் பீளமேடு என்ற பகுதியில் கீதா ரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு நேரத்தில் தனது வீட்டின் முன் நின்று நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே 2 பெண்கள் ஸ்கூட்டியில் வந்தனர். அவர்கள் இருவரும் கீதா ரமணியிடம் வழி கேட்பது போல பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஸ்கூட்டியின் பின்னால் அமர்ந்திருந்த பெண் கீதாரமணியின் கழுத்தில் கிடந்த 4.5 சவரன் தாலி செயினை பறிக்க முயன்றுள்ளார்.
இதனால் கீதாரமணி கத்தி கூச்சலிட்டதும் வீட்டினுள் இருந்த அவரது கணவர் மற்றும் மகன் இருவரும் ஒடிவந்து தப்பிக்க முயற்சித்த அந்த 2 பெண்களையும் பிடித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த இரண்டு பெண்களையும் கைது செய்தனர். அதில் அந்த பெண்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி, அபிராமி என்பது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.