அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பெண்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பருக்கல் கிராமத்தில் வசிக்கும் மகேஸ்வரி மற்றும் வேம்பு என்பது தெரியவந்தது.

இருவரும் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மகேஸ்வரி மற்றும் வேம்பு ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 2 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.