கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் பகுதியில் உள்ள கோவில்பாளையம் மாரியம்மன் தெருவில் வசிப்பவர் ராஜேஷ்(34) இவருக்கு மகா வித்யா என்ற மனைவி உள்ளார். ராஜேஷ் மகா தம்பதியினருக்கு ஆதித்யா (2) என்ற மகன் இருந்துள்ளான். சம்பவத்தன்று இரவு குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க வைத்துள்ளனர். இந்நிலையில் அதிகாலை குழந்தையை பார்த்துள்ளனர். குழந்தையின் மேல் வாந்தி எடுத்தார் போல் வாடை அடித்ததால் சந்தேகப்பட்டு குழந்தையை

மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என தெரிவித்துள்ளனர். இதனால் மகனைப் பார்த்து கதறிய பெற்றோர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இது குறித்து அறிந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்