
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சேர்ந்தவர் புனிதன். இவர் மேஸ்திரியாக வேலை பார்க்கிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு புனிதன் பௌசியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இஷ்வான் என பெயர் சூட்டினர். கடந்து சில நாட்களாக பவுசியா மனநலம் பாதிக்கப்பட்ட அதற்கான சிகிச்சை எடுத்து வந்ததாக தெரிகிறது.
நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த பௌசியா தனது ஆண் குழந்தையை வாளியில் இருந்த தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு மாலை நேரம் அவரும் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பௌசியாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்m