
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சியின் GHMC இணை ஆணையராக இருப்பவர் ஜானகிராம். இவருக்கு திருமணம் ஆகி கல்யாணி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் ஜானகிராமன் மனைவியை விட்டுவிட்டு தன்னை விட 20 வயது குறைவான ஒரு இளம் பெண்ணுடன் கள்ள தொடர்பில் இருந்துள்ளார். இந்த விவகாரம் கல்யாணிக்கு தெரிய வரவே தன் கணவரையும் அந்த இளம் பெண்ணையும் கையும் களவுமாக பிடித்தார். அப்போது அந்த பகுதியில் அக்கம் பக்கத்தினர் கூடியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் கல்யாணி தன் கணவரை அடித்து வெளுத்தார். அதாவது தன் கணவர் அந்த பெண்ணின் வீட்டில் இருந்ததை அறிந்து கொண்டு அங்கு சென்ற கல்யாணி தன் கணவரை அடித்து தாக்கினார். அப்போது பயந்து போன அந்த இளம் பெண் ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்ட நிலையில் அந்த பெண்ணையும் வலுக்கட்டாயமாக கல்யாணி வெளியே இழுத்து வந்து அடித்தார்.
இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்ட நிலையில் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் தன்னுடைய கணவர் ஒவ்வொரு அலுவலகத்தில் பணிபுரியும் போதும் அந்தந்த இடங்களில் ஏதாவது ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பதை வழக்கமாக வைத்துள்ளார் என்று கல்யாணி குற்றம் சாட்டினார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
అమ్మాయితో రాసలీలలు.. అడ్డంగా దొరికిపోయిన “GHMC” అధికారి..!”వారసి గూడ”
తన కంటే 20 ఏళ్ల చిన్న అమ్మాయి అంట… “వెదవ”
ఆ అమ్మాయికి సిగ్గు ఉండొద్దు పెళ్లయి పిల్లలు ఉన్నా వాడితో 🤮
ఇంకో బాధాకరమైన విషయం ఏమిటంటే భార్య అంటుంది నా భర్త కి ఇలాంటివి అలవాటే ప్రతీ దగ్గరే అనిఎంత విసిగిపోయిందో pic.twitter.com/IwWLDMbrxt
— AshaPriya Mudiraj 🇮🇳 (@ashapriya09) February 21, 2025