தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் இந்தியிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வருடம் பாலிவுட்டில் வெளியான அனிமல் திரைப்படம் 800 கோடி வரை வசூல் சாதனை புரிந்த நிலையில், தற்போது சல்மான் கானுடன் இணைந்து சிக்கந்தர் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் பிறகு தமிழில் தனுஷ் உடன் இணைந்து குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். நேஷனல் கிரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில் அவருடைய சம்பள விவரம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது தற்போது சிக்கந்தர் படத்தில் நடிக்க அவர் ரூ.15 கோடி சம்பளம் கேட்டதாகவும் தயாரிப்பு நிறுவனம் அவருக்கு ரூ.12 கோடி சம்பளம் கொடுக்க முன் வந்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது. நடிகை ராஷ்மிகா தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகும் புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் திரையுலகில் 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகைகளாக வலம் வரும் திரிஷா மற்றும் நயன்தாரா இருவரும் ஒரு படத்திற்கு அதிகபட்சமாக ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படும் நிலையில் அவர்களை ஓவர் டேக் செய்து ராஷ்மிகா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறியுள்ளார்.