சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் உள்ள Taixing இல் உள்ள ஒரு இரசாயன நிறுவனத்தில் ஜாங் என்ற நபர் 2004 ஆம் வருடம் பணியில் சேர்ந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஜங்க் பணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அதற்கு காரணம் அவர் அலுவலகத்தில் தூங்கியது தான் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் அலுவலகத்தில் தூங்கியதற்கு முந்தைய நாள் இரவு நீண்ட நேரம் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 20 வருடம் பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து தான் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து ஜாங் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவர் தூங்கியதால் நிறுவனத்திற்கு எந்த ஒரு நஷ்டமும் ஏற்படாத நிலையில் இந்த ஒரு தவறை மட்டும் கருத்தில் வைத்து பணி நீக்கம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டு ஜங்க் அவர்களுக்கு 40 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.