நாமக்கல்லில் இருந்து தனியார் பேருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை வாசுதேவன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிளியநல்லூர் பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் எந்திரம் மூலம் விபத்துக்குள்ளான பேருந்தை மீட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.