நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறப்படுவதாக  இந்திய ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் வங்கி அமைப்பிற்கு திரும்ப வந்துள்ளது. புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 76 சதவீதம் திரும்ப வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இந்நிலையில் ரூ.2,000 நோட்டுகள் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் அறிவிப்பு வெளியானதில் இருந்து கிட்டத்தட்ட 88 சதவீத நோட்டுகள் வங்கிகளில் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மே 19ஆம் தேதி ரூ.2,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இப்போது ஜூலை 31ஆம் தேதி நிலவரப்படி, கிட்டத்தட்ட ரூ.3.14 டிரில்லியன் ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பியுள்ளன. மேலும் ரூ.42 ஆயிரம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் தற்போதும் புழக்கத்தில் உள்ளன. ரூ.2,000 நோட்டுகளை மாற்ற வரும் 2023 செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாகும்.