குவைத் நாட்டில் திருமணம் முடிந்த 3 நிமிடங்களில் மணமகன் மணமகளை அவமதித்ததால் விவாகரத்து செய்து கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மணமகன் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறும் போது மணமகள் கால் இடறி விழுந்ததற்காக அவரை “முட்டாள்” என்று திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த மணமகள் விவாகரத்து செய்ய முடிவெடுத்து, நீதிமன்றத்தில் நீதிபதியிடம் திருமணத்தை ரத்து செய்யுமாறு கோரினார். நீதிபதியும் இதற்கு ஒப்புதல் அளித்து 3 நிமிடங்களில் திருமணத்தை ரத்து செய்தார். இது அந்நாட்டின் வரலாற்றிலேயே மிகக் குறைந்த நேரம் நீடித்த திருமணம் என்று கூறப்படுகிறது.

2019 ல் நடந்த இந்த சம்பவத்தை நபர் ஒருவர் தனது சொந்த வாழ்க்கையுடன் ஒப்பிட்டு, மரியாதை இல்லாத திருமண வாழ்க்கையை விட்டு வெளியேறுவது நல்லது என்ற கருத்துடன் இதை இணையத்தில் பகிர, அது தற்போது வைராலகியுள்ளது. இதேபோல் 2004 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் ஒரு ஜோடி திருமணம் முடிந்த 90 நிமிடங்களில் விவாகரத்து செய்து கொண்டதற்கு அடுத்த படியாக மிக குறைவான நேரத்தில் விவாகரத்தான ஜோடியாக இவர்கள் தற்போது மாறியுள்ளனர்.